Wednesday, 2 April 2014

குழந்தைகள் மனதில் கேள்விகள் முகிழ்த்தெழ

மார்ச் ஏப்ரல் மாதங்கள் தேர்வு மதங்கள். 
குழந்தைகளுக்கு டென்ஷன் இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்களுக்கு டென்ஷ னோ டென்ஷன்.

வேலைக்குபோகும் பெற்றோர்கள் கூட வேலைக்குபோகாமல் குழந்தைகளின் பக்கத்தில் உக்கார்ந்து பார்த்துகொண்டோ வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்து கொண்டோ கண்கொத்தி பாமபாக இருந்து பிடுங்கி எடுத்துவிடுவார்கள். 

குழந்தைகளும் தலைவலி, வாயிற்று வலி என்று கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துகொள்வார்கள். இந்த ஆடு புலி ஆட்டம் ஆண்டாண்டுகாலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மார்ச் மதத்தில் நான்கைந்து நண்பர்கள் என்னை அழைத்தார்கர்கள். எதற்கு தெர்யுமா?
குழந்தைகளின் நோட் புக்கிலுள்ள விடைகள் சரிதானா என்பதை உறுதிப்படுத்த!
அதுவும் எதோ பெரிய பாதகம் ஒன்று நடந்ததுபோன்ற பதட்டத்துடன் கேட்டார்கள். அவர்களின் மனநிலை சற்று ஆழமாக அலசினால் கீழ்வரும் கருத்துக்களுக்கு நம்மால் வரமுடியும் என்று தோன்றுகிறது.

விடைகள் மிகவும் முக்கியமானவை
சரியாக விடை சொல்வதுதான் வெற்றி தரும் திறமை.
ஒரு தொகுப்பு விடையைத் தெரிந்து வைத்துகொண்டால் வெற்றி உறுதி!

ஆனால் இக்கருத்துக்கள் முற்றிலும் சரியா?
தூங்கும்போது வருவதல்ல கனவு; தூங்கவிடாமல் செய்வதே கனவு
புரட்டி பார்த்து வாங்குவதல்ல புத்தகம்; நம்மை புரட்டிபோடுவதே புத்தகம் " என்று சொல்வது போல் "வினாக்களுக்கு விடையளிப்பதல்ல கல்வி; மாறாக விடைதேடும் வினாக்களை எழுப்புவதே கல்வி" என்று சொல்லதோன்றுகிறது.

வினாக்களுக்கு விடை சொல்லிவிட்டு அக்கடா என்று இருப்பதற்காகவா கல்வி கற்றோம்?

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வியப்போடும் ஆர்வத்தோடும் கவனிப்பது, ஒரு வினானுக்கு ஒரு விடையல்ல மாறாக ஆயிரம் விடைகள் உண்டென்றும் அவை சூழலுக்கேற்ப மாறுகின்றன என்றும் புரிந்துகொள்வது, எதிர்பாராத மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்று யோசிப்பது, அனுபவத்தின் வாயிலாக புரிந்துகொண்ட கருத்து பெரும்பாலானோரின் கருத்துகளுக்கு எதிராக இருந்தாலும் துணிவோடு, ஆதராங்களோடு முன்வைப்பது, மனதில் தோன்றிய வினாவுக்கு மேலோட்டமான விடைகளால் திருப்திபடாமல் இருப்பது, கேளிவியை மேலும் கூர்மையாக்குவது,... போன்ற திறன்கள் பெறுவதுதானே உண்மையில் கல்வி.

எல்லாவற்றுக்கும் கேளாக நம் குழந்தைகள் அனைத்திலும் திருப்திபட்டு தேமேயன இருக்கும் வழக்கத்தை விட்டொழிய வேண்டும்.அவர்களின் மனதில் ஆயிரம் கேள்விகள் முகிழ்த்தெழ வேண்டும். அவற்றுள் ஒருசில வினாக்கள் அவர்களின் உறக்கத்தை கெடுக்க வேண்டும்.

அப்படியானால் பெற்றோர்களாகிய நம் மனதில் வரவேண்டிய கேள்வி என்னவாக இருக்கவேண்டும்?

குழந்தைகளின் மனதிழ்க் ஆர்யிரம் கேளிவிகள் முகிழ்த்தெழும் சூழலை எப்படி உருவாகுவது என்பதுதானே? யோசியுங்கள்.

(பாசமலர் என்ற மாத இதழுக்காக எழுதியது)

No comments:

Post a Comment