மூலையில் இருக்கும் குழந்தையின் வேண்டுகோள்
தெரிந்து கொள்ளத்தான் கேள்வியே
ஆனால் நீங்கள் தெரிந்துவைத்துகொண்டே
கேள்விகள் கேட்டீர்கள்
பதில் தெரியாத கேள்வியை
பார்வையால் பரிதவிக்க விடுவீர்கள்
வேட்ட்ருதாளாய் நினைத்து
விரும்பியதை எழுதினீர்கள்
களிமண்ணாய் நினைத்து
கைக்குள் போட்டு பிசைந்தீர்கள்
ஸ்பாஞ் என்று நினைத்து
ஊற்றுனீ ர்கள் ஊற்றுனீ ர்கள்
ஊற்றிகொண் டேய் இருந்தீர்கள்
அடுக்கினீ ர்கள்
ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கினீ ர்கள்
கோட்டையானது
கருத்துக்களின் கொட்டையானது
ஆனால்
அடிப்படையை அசைத்து பார்க்க
மறந்துவிட் டீர்கள்
சரிந்து விழுந்து சிதைந்து போனது
கருத்துகளின் கோட்டை
கேடுபாடுகளுக்கிடையே நான் புதையுண்டுபோனேன்
ஆனால் நான் ஒரு விதை
என்னுள் புதைந்திருக்கிறது ஆலமரம்
விஸ்வரூபம் பெறும் ஆலமரம்
நீங்கள்
ஒரு தோட்டக்காரர்
செடியோடு உறவாடும் தோட்டக்காரர்
உரம் இட்டால் போதாது
என் கரம் பற்றி உரசி செல்லுங்கள்
களை எடுத்தால் போதாது
கட்டிபிடியுங்கள்
விஷத்தை தெளிக்காதீர்கள்
என்னுள் இருக்கும் அமுதமும் விஷமாகும்
காத்திருங்கள்
அவசரபடாதீர்கள்
பூப்படையும்வரை காத்திருங்கள்
பிஞ்சிலே பிடுங்காதீர்கள்
பிஞ்சில் பழுத்த பழம் பாழ்
ஒரு விதையிலிருந்து பல விதை
எனவே எனக்கு அழிவில்லை
அழியாத என்னை அழகாக பார்த்துகொள்ளுங்கள்
தொண்டை வரள்கிறது
தண்ணீர் ஊற்றுங்கள்
மூச்சு முட்டுகிறது
காற்றுக்கு வழிவிடுங்கள்
கூரைகளால் மூடிவிடாதீர்கள்
வெளிச்சம் என் உடலை தழுவட்டும்
தெரிந்து கொள்ளத்தான் கேள்வியே
ஆனால் நீங்கள் தெரிந்துவைத்துகொண்டே
கேள்விகள் கேட்டீர்கள்
பதில் தெரியாத கேள்வியை
பார்வையால் பரிதவிக்க விடுவீர்கள்
வேட்ட்ருதாளாய் நினைத்து
விரும்பியதை எழுதினீர்கள்
களிமண்ணாய் நினைத்து
கைக்குள் போட்டு பிசைந்தீர்கள்
ஸ்பாஞ் என்று நினைத்து
ஊற்றுனீ ர்கள் ஊற்றுனீ ர்கள்
ஊற்றிகொண் டேய் இருந்தீர்கள்
அடுக்கினீ ர்கள்
ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கினீ ர்கள்
கோட்டையானது
கருத்துக்களின் கொட்டையானது
ஆனால்
அடிப்படையை அசைத்து பார்க்க
மறந்துவிட் டீர்கள்
சரிந்து விழுந்து சிதைந்து போனது
கருத்துகளின் கோட்டை
கேடுபாடுகளுக்கிடையே நான் புதையுண்டுபோனேன்
ஆனால் நான் ஒரு விதை
என்னுள் புதைந்திருக்கிறது ஆலமரம்
விஸ்வரூபம் பெறும் ஆலமரம்
நீங்கள்
ஒரு தோட்டக்காரர்
செடியோடு உறவாடும் தோட்டக்காரர்
உரம் இட்டால் போதாது
என் கரம் பற்றி உரசி செல்லுங்கள்
களை எடுத்தால் போதாது
கட்டிபிடியுங்கள்
விஷத்தை தெளிக்காதீர்கள்
என்னுள் இருக்கும் அமுதமும் விஷமாகும்
காத்திருங்கள்
அவசரபடாதீர்கள்
பூப்படையும்வரை காத்திருங்கள்
பிஞ்சிலே பிடுங்காதீர்கள்
பிஞ்சில் பழுத்த பழம் பாழ்
ஒரு விதையிலிருந்து பல விதை
எனவே எனக்கு அழிவில்லை
அழியாத என்னை அழகாக பார்த்துகொள்ளுங்கள்
தொண்டை வரள்கிறது
தண்ணீர் ஊற்றுங்கள்
மூச்சு முட்டுகிறது
காற்றுக்கு வழிவிடுங்கள்
கூரைகளால் மூடிவிடாதீர்கள்
வெளிச்சம் என் உடலை தழுவட்டும்
No comments:
Post a Comment