Wednesday, 2 April 2014

குழந்தைகள் மனதில் கேள்விகள் முகிழ்த்தெழ

மார்ச் ஏப்ரல் மாதங்கள் தேர்வு மதங்கள்.
குழந்தைகளுக்கு டென்ஷன் இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்களுக்கு டென்ஷ னோ டென்ஷன்.

வேலைக்குபோகும் பெற்றோர்கள் கூட வேலைக்குபோகாமல் குழந்தைகளின் பக்கத்தில் உக்கார்ந்து பார்த்துகொண்டோ வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்து கொண்டோ கண்கொத்தி பாமபாக இருந்து பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.

குழந்தைகளும் தலைவலி, வாயிற்று வலி என்று கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துகொள்வார்கள். இந்த ஆடு புலி ஆட்டம் ஆண்டாண்டுகாலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மார்ச் மதத்தில் நான்கைந்து நண்பர்கள் என்னை அழைத்தார்கர்கள். எதற்கு தெர்யுமா?
குழந்தைகளின் நோட் புக்கிலுள்ள விடைகள் சரிதானா என்பதை உறுதிப்படுத்த!
அதுவும் எதோ பெரிய பாதகம் ஒன்று நடந்ததுபோன்ற பதட்டத்துடன் கேட்டார்கள். அவர்களின் மனநிலை சற்று ஆழமாக அலசினால் கீழ்வரும் கருத்துக்களுக்கு நம்மால் வரமுடியும் என்று தோன்றுகிறது.

விடைகள் மிகவும் முக்கியமானவை
சரியாக விடை சொல்வதுதான் வெற்றி தரும் திறமை.
ஒரு தொகுப்பு விடையைத் தெரிந்து வைத்துகொண்டால் வெற்றி உறுதி!

ஆனால் இக்கருத்துக்கள் முற்றிலும் சரியா?
தூங்கும்போது வருவதல்ல கனவு; தூங்கவிடாமல் செய்வதே கனவு
புரட்டி பார்த்து வாங்குவதல்ல புத்தகம்; நம்மை புரட்டிபோடுவதே புத்தகம் " என்று சொல்வது போல் "வினாக்களுக்கு விடையளிப்பதல்ல கல்வி; மாறாக விடைதேடும் வினாக்களை எழுப்புவதே கல்வி" என்று சொல்லதோன்றுகிறது.

வினாக்களுக்கு விடை சொல்லிவிட்டு அக்கடா என்று இருப்பதற்காகவா கல்வி கற்றோம்?

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வியப்போடும் ஆர்வத்தோடும் கவனிப்பது, ஒரு வினானுக்கு ஒரு விடையல்ல மாறாக ஆயிரம் விடைகள் உண்டென்றும் அவை சூழலுக்கேற்ப மாறுகின்றன என்றும் புரிந்துகொள்வது, எதிர்பாராத மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்று யோசிப்பது, அனுபவத்தின் வாயிலாக புரிந்துகொண்ட கருத்து பெரும்பாலானோரின் கருத்துகளுக்கு எதிராக இருந்தாலும் துணிவோடு, ஆதராங்களோடு முன்வைப்பது, மனதில் தோன்றிய வினாவுக்கு மேலோட்டமான விடைகளால் திருப்திபடாமல் இருப்பது, கேளிவியை மேலும் கூர்மையாக்குவது,... போன்ற திறன்கள் பெறுவதுதானே உண்மையில் கல்வி.

எல்லாவற்றுக்கும் கேளாக நம் குழந்தைகள் அனைத்திலும் திருப்திபட்டு தேமேயன இருக்கும் வழக்கத்தை விட்டொழிய வேண்டும்.அவர்களின் மனதில் ஆயிரம் கேள்விகள் முகிழ்த்தெழ வேண்டும். அவற்றுள் ஒருசில வினாக்கள் அவர்களின் உறக்கத்தை கெடுக்க வேண்டும்.

அப்படியானால் பெற்றோர்களாகிய நம் மனதில் வரவேண்டிய கேள்வி என்னவாக இருக்கவேண்டும்?

குழந்தைகளின் மனதிழ்க் ஆர்யிரம் கேளிவிகள் முகிழ்த்தெழும் சூழலை எப்படி உருவாகுவது என்பதுதானே? யோசியுங்கள்.

(பாசமலர் என்ற மாத இதழுக்காக எழுதியது)

கற்றலை மேம்படுத்த செலவில்லாத மூன்று செயல்கள்

திரு சுபிர் சுக்ல ignusERG என்ற நிறுவனத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர். அவர் தன Education Matters என்ற blog ல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குழந்தைகளின் கற்றல் மேம்பட ஆசிரியர்கள் செய்யவேண்டிய மூன்று செயல்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். முற்றிலும் செலவில்லாத மூன்று செயல்கள்.

குழந்தைகளைப் பார்த்து புன்னகை சிந்துங்கள். எப்போதெல்லாம் உங்களால் முடியுமோ அப்போதெல்லாம் அவர்களைப் பார்த்து சிரியுங்கள். பிறகு வழக்கம்போல் கற்பித்தலை தொடருங்கள். சில நாள்களுக்குப் பிறகு குழந்தைகளின் கற்றல் முன்னேறியிருப்பதைக் காணலாம்.

அடுத்து, குழந்தைகளைப் பேச விடுங்கள். அவர்கள் பேச்சுக்கு செவி கொடுங்கள். நாம் அவர்கள்பால் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும் வழி இது. இப்படி செய்வது குழந்தைகளின் கற்றலைக் கூட்டும் என்கிறார் அவர்.

இறுதியாக நாம் குழந்தைகளாக இருந்தபோது எதையெல்லாம் விரும்பினோமோ அதையெல்லாம் நம் குழந்தைகளும் விரும்பிட, அனுபவிக்க வாய்ப்பளியுங்கள். யாருடைய உதவியு,ம் இல்லாமல் மிதிவண்டி ஓட்டியது, நீச்சல் அடித்தது, ஒரு புத்தகத்தை வாசித்து ரசித்தது... என அவர்களின் திறனுக்கேற்ப செயல்பாடுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்தினால் அவர்களின் கற்றல் திறன் வளரும் என்கிறார்.

இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம்மைப்போன்ற பெற்றோர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்

தற்போது நாம் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டோம். நம் குழந்தைப் பருவத்தை வசதியாக மறந்துவிட்டோம். குழந்தைகளுடன் பழகும் ஒவ்வொருமுறையும் நம் குழந்தைப் பருவத்தை திரும்பிப் பார்க்க கிடைக்கும் அருமையான வாய்ப்பு. சவால்களான செயல்களை செய்து பெருமையாடித்ததை நினைத்து பாருங்கள். அதுபோல் குழந்தைகளும் பெருமைகொள்ள வேண்டாமா?

இது கோடை விடுமுறைக்காலம். இக்கருத்துக்கள் மிகவும் பொருத்தமான நேரம்.
லாப நோக்கோடு பல நிறுவனகள்நடத்தும் முகாம்களில் குழந்தைகளை விட்டுவிட்டு அக்கடா என்று இருக்கப் போகிறோமா? அல்லது இந்த் அவசர உலகல்த்திலும் நம் அனைத்துமான குழந்தைகளுக்காக சற்று நேரம் ஒதுக்கப் போகிறோமா? யோசிப்போம்.

Tuesday, 5 March 2013

Students gave a chance for me to participate in their class festival

மஞ்சு  ஏழாம் வகுப்பு மாணவி என் கதைகளில் ஒன்றை வகுப்பு கலைவிழாவில் கூறுகிறாள்

Tuesday, 1 January 2013

Training photos  from Rajendran Thamarapura