30 - 03 - 2012 - வெள்ளிக்கிழமை
இன்று இந்த கல்வி ஆண்டின் கடைசி நாள்
கடந்த பத்து மாதம் என்ன செய்துவிட்டோம்?
ஆசிரியர்களுக்கு எதற்கு இரண்டு மாதம் விடுமுறை?
மிகவும் சிரமப்பட்டு கற்பித்தும் அனைத்து கணித வினாவுக்கும் விடை எழுதியவர்கள் நான்கு பேர் தான்.
முப்பத்தி ஐந்தில் நான்கு பேர்
இதற்கு பத்து மாத சம்பளம்!
அரசு ஆசிரியானான நான் இப்படி யோசிப்பது சரியா?
என்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்
நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்
இந்த முப்பத்தி இரண்டு வருட வேலை அனுபவத்தில் யாராவது ஒரு உயர் அதிகாரி என் வகுப்பை பரிசோதிக்க வரவேண்டுமே... ம்ம்ம்.. இல்லை.
No comments:
Post a Comment